முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குங்குமப்பூ KUNGUMAPOO

 

குங்குமப்பூ

மருத்துவ பூ 


      குங்குமப் பூ என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு (SAFFRON CROCUS) என்ற செடியின் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நறுமண உணவுப் பொருளாகும்.

      மேலும் குங்குமப்பூ உலகப் புகழ்பெற்ற விலை உயர்ந்த நறுமண உணவுப் பொருட்களில் ஒன்றாகும். குங்குமப்பூ  உணவின் மணத்திற்காகவும், நிறத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய இந்திய மருத்துவத்திலும், சீன மருத்துவத்திலும் குங்குமப்பூவில் பயன்பாடு அதிகமாக உள்ளது.

மகரந்தம்


      குங்குமப் பூ வோடு மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இந்த பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில்தான் அதிகமாக பூக்கும். 2 லட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும். தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக காலம் தேவைப்படும். அதனால்தான் இதன் விலையும் அதிகமாக உள்ளது.

விளையும் இடங்கள்

      குங்குமப் பூ கிரீஸ் பர்சியா வரை உள்ள நாடுகளில் விளைகிறது. இந்தியாவில் குங்குமப்பூ ஜம்மு காஷ்மீர் பகுதியில் விளைகிறது.

பெயர்கள்

      குங்குமப்பூ கேஸார் என்றும் ஜாப்ரான் என்றும் அழைப்பர்.

வகைகள்

குங்குமபூவில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான வகைகள்

பத்மகாதி,

பராசிகா,

மதுக்கந்தி,

பாதிகா,

சர்க்கோல்

குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்

      குங்குமப் பூவின் மருத்துவ குணங்களை கண்டறிய சமீப காலமாக உலகளவில் ஆய்வுகள் நடந்து வருகின்றது. குங்குமப் பூவில் குரோசின், குரோசிடின், பீட்டா கரோடின், சாப்ரனால், பிக்ரோ குரோசின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளதை கண்டறிந்து இருக்கிறார்கள். இவ்வேதிப் பொருட்கள் பலவிதமான நோய்களை குணப்படுத்துவதையும் கண்டறிந்துள்ளனர்.

கண்பார்வைத் திறன் அதிகரிப்பு

      குங்குமப் பூ  பார்வைத்திறனை பாதுகாப்பதோடு விழித்திரையை சீரமைக்கவும் உதவுகிறது. குண்குமப் பூவில்  இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடையச் செய்கிறது. அதுமட்டுமின்றி வெளிப்புற தூண்டுதலால் விழித்திரை சேதமடைவதையும் தடுக்கிறது.

      கண்களில் உள்ள இந்த இரத்த நாளங்களில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், முதியோர்க்கு ஏற்படும் கண்புரை நோய், பார்வையில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது.

மாரடைப்பை தடுத்தல்

      இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய பயன்படுகிறது. குங்குமப் பூவிலுள்ள குரோசிடின், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை சீர்படுத்தவும், நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்திடவும் உதவுகிறது. மேலும் மனித செல்லிலிருந்து வெளியேறும் கழிவுகளை இரத்தத்தில் கலக்காமல் வெளியேற்றுகிறது. இவ்வாறாக இரத்தக் குழாய் அடைப்பினை சரி செய்து மாரடைப்பையும் தவிர்க்க உதவுகிறது.

புற்றுநோயை கட்டுப்படுத்துதல்

      குங்குமப்பூ கொடிய நோயான புற்று நோயையும் கட்டுப்படுத்துகிறது. குங்குமப் பூவிலுள்ள வேதிப்பொருட்கள் நினைவாற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது. செல்களிலுள்ள மைட்டோகான்ட்ரியாவினால் ஏற்படுகின்ற கோளாறுகளை சரி செய்வதின் மூலம் புற்று நோய்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

கர்பிணிகளுக்கான பயன்பாடு

      மகப்பேறு நிலையில் உள்ள பெண்கள் குங்குமப் பூவினை உண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்கிற நம்பிக்கை பரவலாக நம் சமுதாயத்தில் உள்ளது. ஆனால் இது அறிவியல் பூர்வமாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. கருவுற்ற காலத்தில் வரும் பசியின்மை, அஜீரணம், மலசிக்கல், கபக் கோளாறு, கால் வீக்கம் போன்றவற்றை சரி செய்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் கால பெண்களுக்கான பயன்பாடு

      குங்குமப் பூவில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் அடங்கியுள்ளது. எனவே ஒரு கப்  குங்குமப் பூ பாலை சூடாக  அருந்தும்போது அடி வயிற்று வலி, மாதவிடாய் வலி, அதிக இரத்தபோக்கு போன்றவற்றை சரி செய்கிறது.

சுகப் பிரசவம்

      கருவுற்று 5 மாதங்கள் கழிந்த பின்னரே குங்குமப்பூவினை உண்பது நல்லது. பேறு காலம் வந்தவுடனே, சோம்பு 2 சிட்டிகை எடுத்து, சீரகம் சிறிது, குங்குமப் பூ தாள்கள் 10 எடுத்து அதனோடு இரண்டு குவளை தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடி கட்டி பனங்கற்கண்டு கலந்து பருகிவந்தால் சுகப் பிரசவம் ஆகும். மற்றவர்கள் 3 முதல் 5 குங்குமப் பூவின் தாள்களை பாலில் கலந்து இரவில் பருக வேண்டும். இதன் பயன் அதிகம் கிடைக்க வேண்டும் என்று அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

ஆஸ்துமா

      பழங்காலம் முதலே குங்குமப் பூ ஆஸ்துமா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள மாங்கனீசு ஆஸ்துமாவை குணப் படுத்துவதற்கு முக்கியமான தேவையாகும். பாரம்பரிய மருத்துவத்திலும் ஆஸ்துமா மருந்தில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

இருமல் மற்றும் சளியை போக்குதல்

      குங்குமப்பூ இருமல், சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து. குறிப்பாக குளிர் காலத்திற்கு மிகவும் நல்லது. குங்குமப் பூ பாலில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை சளியை போக்க பெரிதும் பயன்படுகிறது.

நினைவாற்றலை அதிகரித்தல்



      குங்குமப் பூவில் அதிகமான குரோசின் இருப்பதால் அவை நமது எண்ணம் மற்றும் நினைவாற்றலை ஒரு முகப்படுத்துகிறது. எனவே தினமும் உணவிலோ அல்லது தினமும் ஒரு டம்ளர் பாலிலோ குங்குமப் பூ  சேர்த்து குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

நிம்மதியான தூக்கம்

      குங்குமப் பூவில் உள்ள அதிகமான மாங்கனீஸ் ஒரு லேசான மயக்க மருந்து மாதிரி செயல்பட்டு மூளையை ரிலாக்ஸ் ஆக வைத்து இரவில் நிம்மதியான தூக்கத்தை தருகிறது.

மன அழுத்தத்தை குறைத்தல்

      ஒரு டம்ளர் குங்குமப் பால் தினமும் சாப்பிட்டு வந்தால், குங்குமப் பூவில் கரோட்டினாய்டு , வைட்டமின் பி போன்ற பொருட்கள் மூளையில் உள்ள சொரோடோனின் மற்றும் வேதியியல் பொருட்களை சரி செய்து மனா அழுத்தத்தை குறைக்கிறது.

இதய நோய்கள் வராமல் தடுத்தல்

      குங்குமப் பூவில் அதிகப்படியான குரோசிடின் இரத்தத்திலுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து, இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

கீழ் வாதம் மற்றும் மூட்டு வலியை குறைத்தல்



      குங்குமப் பூவில் அதிகமான அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே தினமும் குங்குமப் பூ பால் அருந்தி வந்தால் திசுக்களில் உள்ள லாக்டிக் அமிலத்தை கரைத்து அழற்சியை போக்கி கீழ் வாத வலி மற்றும் மூட்டு வலியை குணப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

      குங்குமப் பூவில் உள்ள குரோசிடின் உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சரிசெய்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

செரிமானம்

      குங்குமப்பூவானது அதிலுள்ள அதிகளவு ஆன்டிஆக்சிடன்ட்களாலும் அழற்சி பண்புகளாலும் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி நுரையீரல் சிகிச்சைகளிலும் வயிற்று புண் சிகிச்சைகளிலும் பயன்படுகிறது.

உணவு

      அடிப்படையிலேயே குங்குமப் பூவானது ஒரு மசாலா பொருளாகும். எனவே இது உணவில் சேர்க்கப்படுகிறது அதன் சுவையும், மணமும் வித்தியாசமாய் இருக்கும். சமைத்து முடித்தபின் அதன்மீது சிறிதளவு குங்குமப் பூ தூவினால் உணவின் சுவை அதிகரிக்கும்.

அழகு

      சிறிதளவு குங்குமப் பூ, சிறிது சந்தனம், இரண்டு ஸ்பூன் பால் ஆகியவற்றை நன்கு கலக்கி, முகத்தில் பூசி, நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் வரை காய விட்டு முகத்தை கழுவுங்கள் இவ்வாறு வாரம் ஒரு முறை அல்லது இருமுறை செய்து வந்தால் முகம் அழகிய பொலிவுடன் காட்சியளிக்கும்.

      குங்குமப் பூ சந்தையில் விலை கூடுதலாக இருந்தாலும். குறைந்த அளவு மட்டுமே வாங்கி பயன்படுத்தி வந்தால் அற்புதமான மருத்துவம் கிடைக்கும். குங்குமப் பூ குறைவாக பயன்படுத்துவது மிகவும் நல்லது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

  தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி   STAMP VENDOR        தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் 1. வட சென்னை - 31 2. தென் சென்னை - 38 3. மத்திய சென்னை - 21 4. காஞ்சிபுரம் - 51 5. செங்கல்பட்டு - 5 6. வேலூர் - 58 7. அரக்கோணம் - 5 8. செய்யாறு - 39 9. திருவண்ணாமலை - 8 10. சேலம் ( கிழக்கு ) - 8 11. சேலம் ( மேற்கு ) - 10 12. நாமக்கல் - 16 13. தர்மபுரி - 9 14. கிருஷ்ணகிரி - 11 15. கடலூர் - 11 16. விழுப்புரம் - 6 17. சிதம்பரம் - 4 18. திண்டிவனம் - 3 19. கள்ளக்குறிச்சி   - 9 20. விருத்தாசலம் - 19 21. புதுக்கோட்டை - 11 22. அரியலூர் - 23 23...

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

பனை மர பயன்கள்

  பனை மரம் ( மருத்துவ வரம் )       பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும் . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன . பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை . இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன . இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன . காணப்படும் இடங்கள்       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன . தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா , இலங்கை , மலேசியா , இந்தோனேஷியா , மியான்மர் , தாய்லாந்து , வியட்னாம் , சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன . வளரும் சூழ்நிலை       வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது . சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது . வறண்ட சூழலில் 500 முதல் 900 மி . மீ வரை சராச...