முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனை மர பயன்கள்

 

பனை மரம்

(மருத்துவ வரம்)



      பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை. இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.

காணப்படும் இடங்கள்

      ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மியான்மர், தாய்லாந்து, வியட்னாம், சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன.

வளரும் சூழ்நிலை

      வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது. சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது. வறண்ட சூழலில் 500 முதல் 900 மி.மீ வரை சராசரி மழைப்பொழிவு உள்ள பகுதிகளிலும், ஈரப்பதம் மிகுந்த சூழலில் 5,000 மி.மீ வரையுள்ள பகுதிகளிலும் நன்கு வளரும் தன்மைபெற்றது. பனை விதை வழியாக பெருக்கம் செய்யப்படுகிறது. அதிக விளைச்சல் தரக்கூடிய, குட்டைத் தன்மைகொண்ட, விரைவில் ஈனக்கூடிய, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத தாய் மரங்களிலிருந்து பனம் பழங்களை சேகரிக்கவேண்டும். இவற்றை நான்கு வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். இதில் எடை குறைந்த, சுருங்கிய, துளைகள் உள்ள பழங்களை நீக்கிவிட வேண்டும். தரமான பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைப்பு செய்வதன் மூலம் முளைப்புத் திறனை அதிகப்படுத்தலாம். பனை மரமானது 100 அடி உயரம் வளர்ந்து 100 ஆண்டு காலம் வாழும் தன்மையுடையது.

வகைகள்

      பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன அவை

1.ஆண்பனை,2.பெண்பனை,3.கூந்தப்பனை 4.தாளிப்பனை,5.குமுதிப்பனை,6.சாற்றுபனை,7.ஈச்சன்பனை ,8.ஈழப்பனை,9.சீமைப்பனை,10.ஆதம்பனை,11.திப்பிலிப்பனை,12.உடலற்பனை,13.கிச்சிலிப்பனை,14.குடைப்பனை,15.இளம்பனை,16.கூறைப்பனை,17.இடுக்குப்பனை,18.தாதம்பனை,19.காந்தம்பனை,20.பாக்குப்பனை,21.ஈரம்பனை,22.சீனப்பனை,23.குண்டுப்பனை,24.அலாம்பனை,25.கொண்டைப்பனை,26.ஏரிலைப்பனை,27.எசறுப்பனை,28.காட்டுப்பனை,29.கதலிப்பனை,30.வலியப்பனை,31.வாதப்பனை,32.அலகுப்பனை,33.நிலப்பனை,34.சனம்பனை

பண்பாடு

      கார்த்திகைத் திருநாளில் ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது தமிழக இளைஞர்களின் வழக்கமாகும்.

தமிழரின் அடையாளம்


      உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் எழுத்துக்கள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம். உலகின் மூத்த குடியான தமிழ்க்குடிக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு பனைமரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுபட்டது என்பதற்குச் சான்றாக சங்க கால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கற்பக விருட்சம்

      மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாபிரிக்காவில், தமிழகத்தில் என தமிழர்கள் வாழ்ந்த   இடங்களில் எல்லாம் பனைமரமும் வளர்ந்தது. அதனால்தான் நமது முன்னோர்கள் பனை மரத்தை "கற்பக விருட்சம்" என அழைத்தார்கள்.

பனையின் பயன்கள்

பனை ஓலை



      பனை ஓலையில் கலைப்பொருட்கள், நார் பெட்டி, ஓலை பெட்டி, சிலம்பு கம்பம், கல்யாண பாய்கள், இடியாப்பம் தட்டு, விதவிதமான கூடைகள், விசிறி, தொப்பி ஆகிய பொருட்களை சிலர் கைத்தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் பனை ஓலைகள் கூரைகள் மேயவும் பயன்படுகின்றன.

பனை மரங்கள்

      முதிர்ந்த பனைமரங்கள் மரச்சட்டங்கள் செய்வதற்கும் மற்றும் வீடு கட்டுவதற்கும் பயன்படுகின்றன. மரங்கள் கொட்டகைகள் போடுவதற்கும் பயன்படுகின்றன.

பனைமட்டை

      பனை மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

பனையின் மருத்துவ குணங்கள்

      பனையின் பழம், பூ, நீர், வேர் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.

பனை நுங்கு



      பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும். நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். இது தாதுக்கள், வைட்டமின்கள், நீர்சத்துக்கள் கொண்ட ஆரோக்கிய உணவாகும்.

பனம் பூ

      பூ மற்றும் பூங்கொத்திலிருந்து தயாரிக்கப்படும் பஸ்பம் 3-5 கிராம் விதம் உட்கொள்ள குடற்புண், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குணப்படுத்தும். பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச புண்கள் ஆரும்.

பனம்பழம்

      பனம்பழத்தை பால் மற்றும் நெய்யுடன் சமைத்து உட்கொள்ள மூத்திர நிற மாறுபாடு, மூத்திர சுளுக்கு குணமாகும்.

பனம்பழம் தாகம் மற்றும் அயற்சியை போக்குவதுடன் காம உணர்வை தூண்டவும், விந்து எண்ணிக்கையை பெருக்கவும் உதவுகிறது. பனம் பழம் சிறந்த சத்துணவாகும். உயிர்சத்து நிறைந்தது. பித்தம் தருவது, சுட்டு சாப்பிடலாம்.

பனைசர்க்கரை

      பனையிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை இருமல், நுரையீரல் சம்பந்தமான தொற்றுகளில் உகந்தது.

பதநீர்

      பனையிலிருந்து வரும் பதநீர் என்பது ஆரோக்கியமான பானம். இயல்பாக புளிக்காவிட்டால் அதன் பெயர் கள். சுண்ணாம்பின் துணை கொண்டு அதனை புளிக்க விடாமல் செய்தால் அது பதநீர். பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் தமிழர் உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தைப்பிடித்திருக்கிறது. பதநீர் குளிர்ச்சி தரும் பானமாகும். இது வெயிலுக்கு உகந்தது. மூத்திர அடைப்பை போக்கவல்லது. மேக நோயை தீர்க்கவல்லது. பதநீர் 15-20 மி.லி லி பருகிவர விக்கல் மற்றும் நெஞ்சுகரிப்பு குறையும். உடல் சூட்டை தணிக்கவும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் பதநீர் பயன்படுகிறது பதநீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் விருத்தியாகும். நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும்.

பனைமரப்பட்டை

      மரப்பட்டையில் தயாரிக்கப்பட்ட கஷாயத்துடன் சிறிது உப்பு சேர்த்து வாய்கொப்பளிக்க பல், ஈறு மற்றும் வாய்ப்புண் குணம்பெறும்.

பனை வேர்

      வேரை அரிசி கழுவிய நீரில் அரைத்து 5-6 கிராம் வரை உட்கொள்ள வயிற்றுப்போக்கு குணமாகும். மேலும் இதை தொப்புளை சுற்றி பூசுவதாலும் வயிற்றுப் போக்கு கட்டுப்படும். பனை வேர் தொழு நோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பனங்கொட்டை

      பனங்கொட்டையிலுள்ள வெண்மை நிற தேங்காய் போன்ற பருப்பு எலும்பு முறிவைக் குணப்படுத்தும் எண்ணெய்  தயாரிக்கப் பயன்படுகிறது.

            பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்டபின் தோண்ட கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வைத்துச் சாப்பிட்டால் மிகச்சிறந்த உணவாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு கொடுத்து உடலைத் தேற்றலாம்.

பனங்கிழங்கு

      பனங்கிழங்கு மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது. இதை வேகவைத்து துண்டுகளாக்கி சாப்பிடலாம். பனங்கிழங்கு சாப்பிடும் முறை பற்றி பார்க்கலாம்.

  • வேகவைத்து அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து மாவாக்கி சாப்பிட்டால் இரும்பு சத்து கூடும்.
  • பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலம் பெரும். பெண்களுக்கு கர்பப்பை வலுவடையும்.
  • இது வாயு தொல்லை உடையது. எனவே பனங்கிழங்குடன் உப்பு, மிளகு, பூண்டு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டு வரலாம். இனிப்பு பிரியர்கள் கருப்பட்டி சேர்க்கலாம்.
  • பனங்கிழங்கு நார் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒற்றை தலை வலி உள்ளவர்கள் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

பனங்கற்கண்டு

      பனைமரத்திலிருந்து நுங்குகள், பனங்கிழங்கு கிடைக்கிறது. பனைவெல்லத்தில் இருந்து கிடைக்கும் "பனங்கற்கண்டு" இனிப்பு சுவையை கொண்டது பனங்கற்கண்டை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் ஏராளம். வாய் துர்நாற்றம், உடல்சத்து தொண்டைக்கட்டு, ஞாபகசக்தி, நோய் எதிர்ப்பு, உடல் வெப்பத்தை சமமாக்குதல் போன்ற பல பயன்களை கொடுக்கிறது. கர்பிணிப்பெண்கள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன்படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனைவெல்லம்

      டீ, காப்பி பிரியர்கள் இந்த  உலகில் ஏராளம் அதில் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாமல் கருப்பட்டி வெல்லம் உபயோகிக்கலாம். அப்படி அருந்தி வருவதால் நன்மைகள் பல. பனை வெல்லத்தில் கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்கிறது, பனைவெல்லத்தில் வெள்ளை சர்க்கரையை விட 60 மடங்கு கனிமங்கள் இருக்கிறது.

      மலசிக்கல், உடல் எடை, குறைப்பு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றத்துக்கும் உதவும். மற்றும் குடல், உணவுக்குழாய், நுரையீரல் ஆகியவற்றை சுத்தம் செய்ய உறுதுணையாய் உள்ளது.

பனங்கள்ளு



      பனங்கள்ளு மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியையும் அதிகரிக்க செய்யும். பனைமரத்தில் பாலை தெளுவு என்று கூறுவர். பனை பாலையை வெட்டி பால் போன்ற திரவம் படியும். அதை மண் பானைகளில் சேமிப்பவர்கள். கள் புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். கள் அருந்தினால் உடலுக்கு நல்லது மட்டுமல்லாமல் மயக்கம் தரும். கள்ளை காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

            "பனைமரம் இருந்தாலும் ஆயிரம் பொன்

            இறந்தாலும் ஆயிரம் பொன்"

தமிழர்களே

பனை விதைகளை நடுங்கள் தமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுங்கள்

"பனை அதை

தினமும் நினை"

பனைமரம் தமிழர் அடையாளம் மட்டுமில்லை நமது தேசிய இனத்தின் அடையாளமும் கூட ஆகையால் பனையை மீட்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

IFS FOREST EXAMINATIONS இந்திய வனத்துறை அதிகாரி

  இந்திய வனத்துறை அதிகாரி (IFS) காலியிடப் பணிக்கான அறிவிப்பு - 2021       மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இதற்குத் தகுதியும் / விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் .   மொத்த காலிப்பணியிடம் : 110 கல்வித்தகுதி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் , வேதியியல் , புவியியல் , கணிதம் , இயற்பியல் , புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம் , வனவியல் போன்ற ஏதேனும் ஒர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு 1.8.2021 தேதியின்படி MBC , BC - 21- க்கு மேல் 35- க்குள் இருக்க வேண்டும் SC,ST   - 21- க்கு மேல் 37- க்குள் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் 21- க்கு மேல் 32- க்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கட்டணம...