பனை மரம் ( மருத்துவ வரம் ) பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும் . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன . பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை . இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன . இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன . காணப்படும் இடங்கள் ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன . தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா , இலங்கை , மலேசியா , இந்தோனேஷியா , மியான்மர் , தாய்லாந்து , வியட்னாம் , சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன . வளரும் சூழ்நிலை வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது . சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது . வறண்ட சூழலில் 500 முதல் 900 மி . மீ வரை சராசரி மழைப்பொழிவு உள்ள பகுதிகளிலும் , ஈரப்பதம் மிகுந்த சூழலில் 5,000 மி . மீ
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.