அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகாவில் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் உள்ளது . கடிகாசலம் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் 750 அடி உயரத்தில் , 1305 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது . ( கடிகாசலம் - கடிகை நேரம் அதாவது நான்கு நிமிடங்கள் இந்த சுவாமி மலையில் இருந்தாலே கடவுளின் மோட்சம் கிடைத்துவிடும் . அந்த அளவிற்கு வல்லமை பெற்றது கடிகாசலம் மலை ). யோக நரசிம்ம சுவாமி லட்சுமி நரசிம்ம யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் . அதனாலே யோக நரசிம்மர் என்ற பெயரும் உண்டு . இவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருளாகி வழங்குகிறார் . இத்திருக்கோவில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருசுற்றுகள் கொண்டுள்ளன . அழகிய வல்லமை பெற்ற திருக்கோவில் . பொதுவாக பெருமாள் கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே , உற்சவ திருமேனிகளையும் விட்டிருக்கச் செய்வார். ஆனால் சோளிங்கரில் மட்டுமே நரசிம்மர், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.