அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகாவில் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் உள்ளது.
கடிகாசலம்
லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் 750அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. (கடிகாசலம் - கடிகை நேரம் அதாவது நான்கு நிமிடங்கள் இந்த சுவாமி மலையில் இருந்தாலே கடவுளின் மோட்சம் கிடைத்துவிடும். அந்த அளவிற்கு வல்லமை பெற்றது கடிகாசலம் மலை).
யோக நரசிம்ம சுவாமி
லட்சுமி நரசிம்ம யோக நிலையில் பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார். அதனாலே யோக
நரசிம்மர் என்ற
பெயரும் உண்டு.
இவருடன் அமிர்தவல்லி
தாயாரும் அருளாகி
வழங்குகிறார்.இத்திருக்கோவில் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன்
இரண்டு திருசுற்றுகள்
கொண்டுள்ளன. அழகிய வல்லமை பெற்ற திருக்கோவில்.
பொதுவாக பெருமாள்
கோவில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவ திருமேனிகளையும்
விட்டிருக்கச் செய்வார். ஆனால் சோளிங்கரில்
மட்டுமே நரசிம்மர், கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில்
வீற்றிருக்கிறார்.சங்கு சக்ரதாரியாக நன்கு கரங்களுடன், இரு கால்களையும் யோகாசனத்தில்
மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் யோக நரசிம்மர் காட்சி தருகிறார். ஆண்டு முழுவதும்
கண் மூடிய நிலையில் தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும்
கண் திறந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியுடன்,
மலை அடிவாரத்தில் 2 கி.மீ. தொலைவில் தனிக்கோவில்
கொண்டுள்ளார். அங்கு அமிர்தவல்லித் தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம்,
பிரம்மதீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.
யோகா ஆஞ்சநேயர்
யோக ஆஞ்சநேயர் இம்மலையின் அருகே எதிர்திசையில்
350 அடி உயரத்தில் 406 படிக்கட்டுகளுடன், ஒரு சிறிய மலையின் மீது ஆஞ்சநேயர் தியான நிலையில்
அமர்த்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
நோய்கள் நீங்கும்
பேய், பிசாசு, பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பிரம்மதீர்த்தத்தில்
நீராடி மலைமீது அமர்ந்து அருள் பாலிக்கும் யோகா நரசிம்மரையும் , யோகா ஆஞ்ச நேயரையும்
வணங்கினால் நோய்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு காஞ்சிபுரம் வரதராஜர்
பிரமோற்சவத்தின் 3இம் நாள், பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளிகிறார். இந்த குளத்தில்
நீராடினால், பிரமோற்சவம் கூட நீங்கும் என்பது ஐதீகம்.காஞ்சிபுரத்துக்கும், திருவேங்கட
மலைக்கும் இடையில் சோளிங்கர் அமைந்துள்ளது மிக சிறந்த பிரார்த்தனை தலம். மன அமைதி தரும்
அற்புதமான பூமி. இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான
பக்தர்களின் பிரச்சனை விரைவில் குணமாகிறது. இங்குள்ள திருக்குளத்திற்கு 'அனுமத் தீர்த்தம்' என்பது திருநாமம். ஸ்ரீ யோகா நரசிம்மருக்கு
சோளிங்கரை தவிர மற்ற இடங்களிலும் கோவில்கள் உண்டு. ஆனால் யோகா ஆஞ்சேநேயருக்கு இங்கு
மட்டுமே கோவில் உள்ளது. அவர் இங்கு யோகா மூர்த்தியாக மட்டுமல்லாமல், அகிம்சை மார்க்கத்தை
நிலை நாட்டியவரும் ஆவார்.
நினைத்தது நடக்கும்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மரை வணங்கினால் குழந்தையின்மை,
திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும், லாபம் பெருகும், பில்லி
சூனியத்தை விரட்டலாம். புதிதாக நிலம் வாங்க வேண்டும் என்ன நினைப்பவர்களும், வீடு கட்ட
ஆசைப்படுபவர்களும் கோவில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல்
ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக்கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும்
என்பது நம்பிக்கை. இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரமஹத்தி தோஷம் முதலான
சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வதற்கு
சமமானது என்கிறார்கள்.
அபிஷேகம்
கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப்பழம்
தருதல், நரசிம்மருக்கும், தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து
பிரசாதம் படைத்தல் என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள்
பக்தர்கள். வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்)நடைபெறும்.
அந்த நாளில் திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வது விசேஷம். சோளிங்கரில் முதலில்
நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சேநேயரை தரிசிப்பது வழக்கம். சுவாமி ஸ்ரீ சாளக்
கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிவா வடிவம் என்கின்றனர். இத்தலத்து பெருமாள்,
ஒரே கல்லால் ஆன மலை மீது அருள்பாளிக்கும் தன்னை 1500 படிகள் ஏறி வந்து தரிசித்தாலே
பலன் தந்து விடுவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
அதிசயம்
இத் திருக்கோவிலில் மழை வேண்டி நரசிம்மருக்கு
1008 குடங்களுடன் விசேஷ அபிஷேகம் செய்தால் மழை பொழியும் என்பது இன்றுவரை கண்கூட நடந்துவருகிறது.
மேலும் இக்கோவிலில் உள்ளே கோமுகம் வெளியேறுவதற்கு கோமுகம் எதுவும் அமைக்கப்படவில்லை
இருப்பினும் நரசிம்மருக்கு செய்யப்படும் அபிஷேக நீர் முழுவதும் அவரது காலடியில் மாயமாக
மறைந்து விடுகிறது. இது இன்று வரை நடக்கும் பேரதிசயமாகும்.
பூஜை
தினமும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரைக்கும்
கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் தான் கோவில் நடை திறந்திருக்கும்.
முதலில் விஸ்வரூபம், நித்யபடி, முதல்காலம், 2ம் காலம், அரவானை ஆகிய முறைகள் பூஜைகள்
நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவ பூஜைகள் நடக்கிறது.
நம்பிக்கையுடன் யோக நரசிம்ம சுவாமியை வணங்கினால் நினைத்ததெல்லாம் நடக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக