திரிபலா அமிர்தம் திரிபலா சூரணம் நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் . இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள் . மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம் . உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது . நெல்லிக்காய் ( Ribes uva-crispa) நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது . இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது . மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது . சுவாச பாதையில் உள்ள சளியைய் போக்க உதவுகிறது . நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி , மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது . சீரான இரத்த ஓட்டதிற்கு உ
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.