முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

THIRIPALA திரிபலா சூரணம்

 

திரிபலா

அமிர்தம்



 திரிபலா சூரணம்

      நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம். இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள். மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம். உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது.

நெல்லிக்காய் (Ribes uva-crispa)



  • நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
  • நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது. சுவாச பாதையில் உள்ள சளியைய்  போக்க உதவுகிறது.
  • நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
  • சீரான இரத்த ஓட்டதிற்கு உதவும் இரும்பு சத்தை கொடுத்து இதயம் சரியான முறையில் செயல்பட நெல்லிக்காய் உதவுகிறது.
  • நெல்லிக்காயில் நச்சுகளை வெளியேற்றும் தன்மை இருப்பதால், புதிய திசுக்களின் உருவாக்கத்தில் உதவி, சரும பொலிவை உண்டாக்குகிறது .
  • புரத ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது. மேலும் தசைகளுக்கு சிறந்த டோனர் போல் செயல்படுகிறது.

 தான்றிக்காய் (Terminalia bellirica)



  • தான்றிக்காய் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. மேலும் குருதிப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் அதிக கொழுப்பை வெளியேற்றி உள்ளிருந்து சுத்திகரிக்கிறது.
  • கண்பார்வை மற்றும் குரலின் தரத்தை மேம்படுத்த இதன் கிருமிநாசினி தன்மை உதவுகிறது.
  • கூந்தலின் வேர்க்கால்களை வலிமைப்படுத்தி, கூந்தல் நிறத்தை மேம்படுத்துகிறது.

கடுக்காய் (Terminalia chebula)


  • கடுக்காய்க்கு ஐந்து சுவைகள் உண்டு அவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, உறைப்பு போன்ற சுவைகளைக் கொண்டது,
  • இது செரிமான அமைப்பு மற்றும் உணர்ச்சி உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுகிறது.
  • மூல நோய், இரத்த சோகை, இரைப்பை பிரச்சனைகள், பித்தப்பை கற்கள் போன்றவற்றை சிறந்த முறையில் எதிர்க்க உதவுகிறது. காய்ச்சல், தலைவலி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றை எதிர்த்து போராடுகிறது.
  • இதய நோயைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

தயாரிக்கும் முறை

   இதை வீட்டில் தயாரிக்கும் முறை குறித்து முதலில் தெரிந்துகொள்வோம். நெல்லிக்காய்  - 4 பங்கு, தான்றிக்காய் - 2 பங்கு, கடுக்காய் - 1 பங்கு அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காய் விதை நீக்கி பயன்படுத்த வேண்டும்.

   இந்த மூன்றையும் நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கவும். கடுக்காய், தான்றிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் என்றாலும் தயாரிக்க சிரமம் இருப்பவர்கள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

சாப்பிடும் முறை

   எல்லா காலங்களிலும் இதை உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உரிய முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். கோடையில் நீருடனும், குளிர்காலத்தில் தேனுடனும், மழைக்காலங்களில் வெந்நீருடனும் கலந்து சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு தேனில் குழைத்தும், பெரியவர்கள் நீரில் கலந்தும் குடிக்க வேண்டும். தினமும் காலை இரவு என இரண்டு வேலையும்    குடிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

   துவர்ப்பு சுவையுடைய இந்த சூரணம் உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றால் வரும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. உடலினுள் உறுப்புகள் வரை சென்று செயலாற்றக்கூடிய குணத்தை கொண்டது என்பதால் சாதாரண கிருமித்தொற்று முதல் புற்றுநோய் செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்  எதிர்ப்புசக்தியை தருகிறது. உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடும் அளவுக்கு உடலுக்கு எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. சிறநத ஆன்டி பயாடிக் என்றும் இதை சொல்லலாம், ஆய்வு ஒன்றிலும் திரிபலா சூரணம் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும், புற்றுசெல்கள் வளரும் அபாயத்தையும் குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

செரிமானம்

   இது இயற்கையாக பசியை தூண்டும் ஒரு பொருள். செரிமானக் கோளாறுகளை அடிக்கடி சந்திப்பவர்கள் குடல்பிரச்சனைகளையும் கொண்டிருப்பார்கள். உணவுப்பாதை, குடல் இயக்கம் சீராக செயல்பட இந்த சூரணம் உதவுகிறது. குடலுக்கு செல்லும் உணவுப்பாதையில் இருக்கும் நச்சுகளை நீக்கி மலச்சிக்கல் இல்லாமலும் காக்கிறது. குடல் நச்சுக்களை வெளியேற்றும் போது குடலில் இருக்கும் நாடாப்புழுக்கள், ஒட்டுண்ணிகள் , பூச்சி தொற்றுகள் போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது. குடல் சுத்தமாக இருந்தாலே உடலில் பாதி பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

 சீரான ரத்த ஓட்டம்

   உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் ரத்த ஓட்டமும் தடையின்றி இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்க இவை உதவுகிறது. அதோடு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்வதால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. சருமம் இயற்கையாகவே பளபளப்பை அடைய இந்த சூரணம் உதவுகிறது.

சர்க்கரை நோய்

   நீரழிவு இருப்பவர்கள் அதை கட்டுக்கள் வைக்க திரிபலா சூரணத்தை எடுத்துக்கொள்ளலாம். இவை கணையத்தின் வேலையை சிறப்பாக்கி இன்சுலின் சுரப்பியை ஊக்குவிக்கிறது. அதிக நீரழிவு பிரச்சனையான ஹைப்பர் கிளைசீமியா என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயாளிகளுக்கு இவை அருமருந்தாக இருக்கும். உடலில் குளுக்கோஸ் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. திருபலாவில் உள்ள கசப்பு சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. திரிபலா சூரணத்தை ஐந்துகிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து கால் டம்ளர் அளவு சுண்டியதும் குடித்து வந்தால் பலன் தரும்.

கொழுப்பை குறைத்தல்

      உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளால் அதிகரித்திருக்கும் எடையை கட்டுக்குள் வைக்க பக்கவிளைவில்லாமல் இவை உதவுகிறது. உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் குணத்தை இது கொண்டிருப்பதால் இதை தினமும் எடுத்துக்கொள்ளலாம். உடலில் கொழுப்பை உண்டாக்கும் அடிபோஸ் செல்களை தாக்கி கொழுப்பின் அளவை குறைக்க செய்கிறது. தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு அரைமணி நேரத்துக்கு வேறு ஆகாரம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

கண்களுக்கு பாதுகாப்பு

   கண்களுக்கும் சருமத்திற்கும் சிறந்த நன்மையை வழங்குகிறது. திரிபலாவைக் கொண்டு கண்களைக் கழுவுவதால், கண்புரை, கிட்டப்பார்வை, இமைப்பட அழற்சி போன்றவை குணமாகிறது.

திரிபலாவை தினமும் சாப்பிட்டு வர, நம்முடைய ஆயுள் கூடிக்கொண்டே செல்லும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

  தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி   STAMP VENDOR        தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் 1. வட சென்னை - 31 2. தென் சென்னை - 38 3. மத்திய சென்னை - 21 4. காஞ்சிபுரம் - 51 5. செங்கல்பட்டு - 5 6. வேலூர் - 58 7. அரக்கோணம் - 5 8. செய்யாறு - 39 9. திருவண்ணாமலை - 8 10. சேலம் ( கிழக்கு ) - 8 11. சேலம் ( மேற்கு ) - 10 12. நாமக்கல் - 16 13. தர்மபுரி - 9 14. கிருஷ்ணகிரி - 11 15. கடலூர் - 11 16. விழுப்புரம் - 6 17. சிதம்பரம் - 4 18. திண்டிவனம் - 3 19. கள்ளக்குறிச்சி   - 9 20. விருத்தாசலம் - 19 21. புதுக்கோட்டை - 11 22. அரியலூர் - 23 23...

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

GRAMA UDAVIYALAR VILLAGE ASSISTANT

  திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு             திருவள்ளூர் மாவட்ட வருவாய்துறைக்கு உட்பட்ட வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .   பணி   -   கிராம உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 145 கல்வித்தகுதி - 5 ம்   வகுப்பு தேர்ச்சி மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்   இதர தகுதி : மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் / வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.   வயது - 01.07.2020 அன்று   மனுதாரர் 21 வயது நிரம்பியவராக   இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 21 க்கு மேல் 30 க்குள் BC, MBC ,   SC ,ST         - 21 க்கு மேல் 35 க்குள்                          ...