கடுக்காய் இறைவன் படைத்த அற்புதம் மரம் கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இது இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளரக்கூடியது. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த கடுக்காய் மரம் கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும், அதன் அடிப்பாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகளை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூவும் காயும் பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். அதிக மணமெல்லாம் இருக்காது. மிக மிக மெல்லிய மணத்துடன் காணப்படும். சில வகை கடுக்காய் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்து கொத்தாக பச்சை நிறத்த
மருத்துவம் , கல்வி, செய்தி, ஆன்மிகம் , வேலை வாய்ப்பு , உணவு மற்றும் பிரபலமான மனிதர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட வலைப்பதிவினை காண்பீர்கள்.