முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

KADUKKAI கடுக்காய்

 

கடுக்காய்

இறைவன் படைத்த அற்புதம்



மரம்

      கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல்   தான் வளரும்.  இது இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளரக்கூடியது. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த கடுக்காய் மரம் கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும், அதன் அடிப்பாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகளை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும்.

பூவும் காயும்



      பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். அதிக மணமெல்லாம் இருக்காது. மிக மிக மெல்லிய மணத்துடன் காணப்படும். சில வகை கடுக்காய் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்து கொத்தாக பச்சை நிறத்தில் காய்த்துக் காணப்படும். பழுத்து முற்றியபின் கருமையும் பழுப்பும் கலந்த நிறமாக இருக்கும். வரிவரியாக தடித்து ஓட்டோடு காணப்படும். ஓட்டுக்குள் இருக்கும் கொட்டையைத் தான் நாம் எடுத்துப் பயன்படுத்துவோம். கொட்டையைப் பயன்படுத்தக் கூடாது. நீக்கி விட வேண்டும். ஏனென்றால் அதில் விஷத்தன்மை அதிகம்.

 வகைகள்

      கடுக்காய் நீள் வட்ட வடிவிலோ அல்லது நீண்டோ காணப்படும். கடுக்காயில் மொத்தமாக ஏழு வகைகள் உள்ளன. இதன் தன்மைகளைப் பொறுத்து, கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பல வகைகள் உள்ளன. புதியதாக முளைக்கும் காய்களைக் காயவைத்துதான் முளைக்க வைப்பார்கள். கடுக்காயை வெளிச்சம் படாத இடத்தில சேமித்து வைத்திருந்தால் ஒரு  வருடம் வரையிலும் கூட வைத்திருக்க முடியும்.

அமுதம்



 

      ஒருவருடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய்க்கு அமுதம் என்றோர் பெயரும் உண்டு. தேவர்கள் பாற்க்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்கையாகும். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி. ஒருவருடைய பிறவிப்பயனை நீட்டித்து வருகிறது.

சுவை

      கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்பிற்கு அறுசுவைகளும் சரிவிகிதத்தில் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய்வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப்பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்துவந்தால், நமது உடம்பிற்குத் தேவையான துவர்ப்பை தேவையான அளவில் பெற்று வரலாம்.

சித்தர் பாடலில்,

காலை இஞ்சிகடும்பகல் சுக்கு

மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்

விருத்தனும் பாலனாமே.

என்று கூறப்பட்டுள்ளது.

சாப்பிடும்முறை

      அதன்படி காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். இதனால் அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும், திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஆகிய மூன்றும் சமஅளவு கலந்த ஒரு கலவை மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, ஆங்கிலம் மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோயினில் இணைமருந்தாய் காடுக்காயினை பயன்படுத்தலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

      கண்பார்வைக் கோளாறுகள், காதுகேளாமை, சுவையின்மை, பித்தநோய்கள், வாய்ப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல்நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக்குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, தசையடைப்பு, நீரடைப்பு, மூலம், ரத்த பேதி, பௌத்திரக்கட்டி, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டுவலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக்குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய மருந்தே கடுக்காய்.

பல்வியாதிகளுக்கு பற்பொடி

      கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறுகிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல்துலக்கி வர அனைத்து பல்வியாதிகளும்  தீரும்.

மூலநோய்

      கடுக்காய் தூளை நீரிலிட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும். கடுக்காய் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

நமது தேகத்தின் பலத்தைக் கூட்டி, ஆயுளை விருத்தி செய்ய எளிய வழிகள்

      கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை விடுத்து தோலினை நன்கு தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் தினசரி உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, நோயில்லா வாழ்வை பெறலாம்.

  • கடுக்காய் வாயிலும், தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள வீரணங்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப்போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
  • காதுநோயை குணப்படுத்தும், கடுக்காய் உடல் வலிமையூட்டி, நீர் பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கைகால் நமைச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
  • காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள்  கடுக்காய் பொடியினை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்.
  • கடுக்காய் பொடியினை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்.
  • கடுக்காய் உடைத்துத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரைத்தேக்கரண்டி பொடியை உட்கொண்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
  • மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலசிக்கல் மாறும், உடல் பலம்பெறும்.
  • கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாத வலி, பித்த நோய்கள் குணமாகும்.
  • 15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்கவைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறைபேதியாகும். அதன்பின் மலசிக்கல், வயிற்றுப்பிணிகள் மாறிவிடும்.

            எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய முக்கியமான ஒற்றை மூலிகைப் பொருள் என்பதை நினைவில் நிறுத்தி, தொடர்ந்து உபயோகித்து நோயின்றி நெடுநாள் வாழ்வோமாக.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IAS IPS CIVIL SERVICE EXAM

  இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு       இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு ( Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும் . இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும் . இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது . தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . தகுதிகள் கல்வித்தகுதி இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் குறைந்த பட்ச கல்வி தகுதி , இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு       இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும் .   அதிக பட்ச வயது வரம்பு , பொதுப் பிரிவினருக்கு 32 வயது , இதர பிற்படுத்த ப...

TN VAZHAKAADAL THURAI

  வேலைவாய்ப்பு தமிழ்நாடு வழக்காடல் துறை       அரசு தலைமை வழக்குரைஞர்   அலுவலகத்தில் ( சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ) 16 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பணி   -   அலுவலக உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 16         விவரங்கள் கல்வித்தகுதி - 8 ம்   வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.   நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு   முன்னுரிமை வழங்கப்படும் . வயது - 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராக   இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 18 க்கு மேல் 30 க்குள் BC,MBC                            - 18 க்கு மேல் 32 க்குள் SC,ST                      ...

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...