மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்
தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார்.
புற்று கோவில்
அமாவாசை நாட்களில் ஆலயத்தில்
கூட்டம் நிரம்பி வழியும், கருவறையில்
உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள்.
வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய
தேரில் அவளை உட்கார வைத்து
ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். பௌர்ணமி
தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள்
வந்து வணங்க இருபத்தி நான்கு
மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள்
அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள்.
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள
பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயான கொள்ளை என்ற
பெயரில் பெரிய விழா நடக்கும்போது
பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக்
கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு படைக்கிறார்கள். அங்கு மயானத்தில்
அவளை ஆராதிக்கிறார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்க்கவே பயமாக
இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும்
அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்.
தோ்
ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனுார்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும், அப்போது
நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன்
அமர்ந்து வீதிவுலா வருவார், இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது,
தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும்.
முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர், இந்த
ஐதிகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள்.
அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும்.
குறி சொல்லுதல்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில்
அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறி
சொல்லப்படுகிறது. கோவிலின் பலபகுதிகளில் குறி சொல்பவர்களை காணலாம். நினைத்த
காரியம் நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? காணாமல் போன பொருள் திரும்பவும்
கிடைக்குமா? வேலை எப்போது கிடைக்கும்? கோர்ட்டு வழக்குகளில் சாதகமான தீ்ர்ப்பு
கிடைக்குமா? என்பது பற்றி பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறி சொல்பவர்கள் விடை
கூறுகிறார்கள். குறி கேட்க செல்பவர்கள் கற்பூரம் வாங்கி செல்லவேண்டும். இங்கு குறி கேட்க வரும்
பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பேய் விரட்டுதல்
இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய்
விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில்
நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த
பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம்
போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள்
வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன்
பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில்
அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன்
கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.
துாய மனதுடன் ஆற்றல் மிக்க சக்தியான அங்காள
பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை சக்தியாக விளங்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக