முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

IAS IPS CIVIL SERVICE EXAM

 

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு



      இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும். இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தகுதிகள்

கல்வித்தகுதி

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
  • குறைந்த பட்ச கல்வி தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

      இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும்.  அதிக பட்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 32 வயது, இதர பிற்படுத்த பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 37 வயதாகும்.

தேர்வு எழுத வாய்ப்பு

      இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்

      பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயேர் (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு முறை எழுதலாம்

      இதர பிற்படுத்த வகுப்பினர் அதிக பட்சமாக ஏழு முறை எழுதலாம்

      தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

தேர்வில் இடஒதுக்கீடு

      இப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்

வகுப்பினர்                                                                     இட ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் (SC)                                  15.0%

பழங்குடியின வகுப்பினர்கள் (ST)                                     7.5%

இதர பிற்படுத்த வகுப்பினர் (OBC)                                       27%

மொத்த இட ஒதுக்கீடு                                                            49.5%

பொது (SC/ST மற்றும் OBC பிரிவினர் உட்பட)      50.5%

தேர்வு முறைகள்

இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகின்றன

முதனிலை தேர்வு (Premilinary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.

முதனிலையில் தேறியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.

முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test)

முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வில் பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்

  • முறையே முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு  அனுப்பும்
  • பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்

காலிப்பணியிடங்கள் - 712

தேர்வுக்கட்டணம் MBC, BC, GENERAL - ரூ.100

SC,ST, FEMALE - PWBD - தேர்வுக்கட்டணம் செலுத்தத்தேவையில்லை

கடைசித்தேதி

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2021

மேலும் விவரங்களுக்கு

https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CSP-2021-Engl-04032021.pdf

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

பனை மர பயன்கள்

  பனை மரம் ( மருத்துவ வரம் )       பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும் . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன . பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை . இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன . இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன . காணப்படும் இடங்கள்       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன . தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா , இலங்கை , மலேசியா , இந்தோனேஷியா , மியான்மர் , தாய்லாந்து , வியட்னாம் , சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன . வளரும் சூழ்நிலை       வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது . சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது . வறண்ட சூழலில் 500 முதல் 900 மி . மீ வரை சராச...

IFS FOREST EXAMINATIONS இந்திய வனத்துறை அதிகாரி

  இந்திய வனத்துறை அதிகாரி (IFS) காலியிடப் பணிக்கான அறிவிப்பு - 2021       மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இதற்குத் தகுதியும் / விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் .   மொத்த காலிப்பணியிடம் : 110 கல்வித்தகுதி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் , வேதியியல் , புவியியல் , கணிதம் , இயற்பியல் , புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம் , வனவியல் போன்ற ஏதேனும் ஒர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு 1.8.2021 தேதியின்படி MBC , BC - 21- க்கு மேல் 35- க்குள் இருக்க வேண்டும் SC,ST   - 21- க்கு மேல் 37- க்குள் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் 21- க்கு மேல் 32- க்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கட்டணம...