முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

AVARAMPOO PAYANGAL ஆவாரம்பூ

 

ஆவாரம்பூ

அற்புத மருத்துவ பூ



     ஆவாரம்பூ ஆவாரை, ஆவிரை, மேகாரி என்றும் அழைப்பர், ஆவாரம் பூ ஒரு மருத்துவ மூலிகை பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். "ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோர்" என்று சித்த மருவத்துவத்தில் ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு ஆவாரம் பூவில் பல நோய்களுக்கு அற்புத மருத்துவம் உள்ளது,

பொங்கல் திருவிழா

      ஆவாரம்பூ தைப்பொங்கல் திருநாளில் காப்புக் கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலன்று மாடுகளுக்கு மாலை கட்டுவதற்கும், வீடுகளுக்கு தோரணம் கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர்,

மருத்துவ பூ ஆவாரம்பூ

      தாவரங்களின் வேர், இலை, மரப்பட்டை, காய், கனி போன்றவை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. ஆவாரம் பூ அப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும்.

      நம் வீட்டின் அருகிலேயே அற்புதமாக கிடைக்கும் மூலிகை தான் இந்த ஆவாரம்பூ. இது பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இதன் பலன் பெரியது. இது பயிறு வகை குடும்பத்தை சார்ந்த தாவரமாகும். இது இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரமாகும். வறண்ட நிலங்களிலும் துளிர்விட்டு வளரும் தாவரமாகும். ஆவாரம் பூ துவர்ப்பு சுவையுடையது.

      ஆவாரம் பூக்கள், இலைகள் மற்றும் அதன் செடி கூட பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம் நாட்டில் சாதாரணமாக வளரும் இந்த ஆவாரம் பூக்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் தோட்டங்களில் வைத்து வளர்த்து இதன் மருத்துவ பண்புகளை பெற்று வருகிறார்கள். இத்தகைய ஆவாரம் பூவை காய வைத்து பொடியாக்கி நாட்டு மருந்துகடைகளில் ஆவாரம் பொடியாக விற்கிறார்கள்.

ஆவாரம் பூ பயன்கள்

குளிர்ச்சிதரும் ஆவாரம் பூ

      உடலில் அதிகமாகும் சூட்டை குளிர்ச்சிபடுத்த உதவும், உடலில் உச்சந்தலையில் சூட்டை உணராமல் வைக்க ஆவார இலையை தலையில் போட்டால் போதுமானது. உச்சந்தலையில் சூடு இறங்காது.

நீரிழிவு நோயை கட்டுபடுத்துதல்

      நீரிழிவை கட்டுப்படுத்த மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் என்று பலவும் இருந்தாலும் கூட உணவு வகைகளிலும் கட்டுப்கோப்பாக இருக்கவேண்டும். அதோடு மருந்தே உணவாய் இருக்ககூடிய உணவு வகைகளையும் தவிர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆவாரை அற்புத மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் நீரிழிவுக்கான இயற்கை மருந்து என்றே சொல்லலாம்,

தயாரிப்பு முறை - 1


      நீரிழிவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது ஆவாரம் பூ. மேலும் நீரிழிவால் உண்டாகக் கூடிய தாகம், உடல் சோர்வு, தொண்டை வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற உபாதைகளை கட்டுப்படுத்துகிறது. ஆவாரை பூ, இலை, வேர், பட்டை, பிசின் அனைத்தையும் ஒன்றாக்கி அதனுடன் நாவல் பட்டை, கொன்றைபட்டை, மருதம், கோஷ்டம் கொண்டு தயாரிக்கப்படும் ஆவாரை நீர் நீரிழிவைக் கட்டுப்படுத்துவதோடு நீரிழிவால் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துகிறது.

      சுருக்கமாக சொல்வதானால் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது ஆவாரை குடிநீர் என்று சொல்லலாம்.

தயாரிப்பு முறை - 2

      ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.

நீர் வறட்சி

      வெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்குள் சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும். இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.

முக அழகு

      எல்லோருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும். முகம் பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட பசைகள் போன்றவற்றை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும். மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

உடல் துர்நாற்றம்

      கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் உண்பவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.

மூலம்

      ஆவாரம்பூ கொழுந்து, ஆவாரம்பூ பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள்மூலம் குணமாகும்.

காய்ச்சல்

      பெரும்பாலான காய்ச்சல் வகைகள் ஏதாவது ஒரு வகை நுண்ணுயிரி தொற்றுகள் மூலமே ஏற்படுகிறது. எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆவாரம் பூக்களை  போட்டு வைத்து தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.

சிறுநீரக தொற்று

      பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரத்தன்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தொற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினை பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ ஜுசை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.

வயிறு, கல்லீரல்



      ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்பந்தமான நோய்களும் குணமாகும். ஆவாரம்பூ தேனீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.

கிருமி நாசினி

      ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வவ்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும். ஆவாரம்பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வவ்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தி ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.

மாதவிடாய்

      சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தபோக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். அதோடு கருப்பையில் இருக்கும் நச்சுக்களையும் இது போக்கும்.

மலச்சிக்கல்

     ஆவாரம் பொடியை நாம் தினமும் சிறிதளவு சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கல் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.

உடல் எடை குறைக்க

     தினமும் ஆவாரம் பொடியினால் செய்யப்பட்ட டீ குடிக்கும் பொழுது உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் விலகி உங்கள் உடல் எடையை குறைக்கும்.

ரத்த கசிவை தடுக்கும்

     உங்கள் உடலுக்குள் அல்லது வெளிப்புறத்தில் ஏற்படும் ரத்தக்கசிவை உடனடியாக நிறுத்தும் ஆற்றல் கொண்டது இந்த ஆவாரம்பூ பொடி. ஒரு சிலருக்கு உடலில் ரத்தக் கசிவுகள் ஏற்படும், இதனால் நம் உடல் நலம் பெரிதளவு பாதிக்கும். இதை தடுப்பதற்கு நாம் ஆவாரம் பொடியை சாப்பிட வேண்டும்.

கர்ப்ப காலப் பயன்கள்

     கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த ஆவாரம் பொடியை சிறிதளவு எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதை குறுகிய அளவு எடுத்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.

சரும நோய்

     சருமத்தில் உண்டாகும் நோய்க்கு ஆவாரை பட்டையுடன் பால் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து குளித்துவந்தால் எப்பேர்ப்பட்ட நோயும் குணமாகும். நாட்டுமருந்து கடைகளில் ஆவாரை எண்ணெய் கிடைக்கிறது. இதையும் பயன்படுத்தலாம். குளியல் பொடிகளை தயாரிக்கும் போது ஆவாரம் பூக்களை காயவைத்து சேர்க்கலாம். இவை உடலில் வியர்வை நாற்றத்தை போக்கும் என்பதோடு உடலுக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

சிறுநீர் கடுப்பு

     சிறுநீர் கடுப்பு அல்லது சிறுநீர் போகும்போது எரிச்சல், கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்துவந்தால் சிறுநீர்கடுப்பும் எரிச்சலும் விரைவில் குறையும்.

ஆவாரம்பூ சாப்பிடுவதால் வரும் பலன்கள்

     ஆவாரை பூவை குடிநீராக, துவையலாக, பருப்பு கலந்து கூட்டாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்புடன் வேகவைத்து நெய் கலந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவாரம் பூக்களை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். ஆவாரம் பூவில் ரசம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து கொண்டும் பயன்படுத்தலாம்.

மலட்டுத்தன்மை நீங்க

     திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பெண்களுக்கு ஆவாரை பயன்படுத்துகிறது. அதாவது கறுப்பட்டியுடன் ஆவரைப் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

ஆவாரம் பூ டீ மருத்துவ பயன்கள்

தேவையான பொருட்கள்

காய்ந்த ஆவாரம்பூ - கால் கிலோ

லவங்க பட்டை - 10 கிராம்

சுக்கு - 10 கிராம்

மிளகு - 10 கிராம்

திப்பிலி - 10 கிராம்

ஏலக்காய் - 10 கிராம்

செய்முறை

     மேற்கூறிய பொருட்களை வாங்கி சுத்தப்படுத்தி ஒன்றாக கலந்து நன்கு அரைத்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இந்த தூளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வரவும்.

பயன்கள்

     இந்த தேனீரை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் உடனே குணமாகும். சிறுநீரக கற்களை கரைக்கும். தீராத மலசிக்கல் தீரும். சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக உதவக்கூடியது இந்த அற்புதமான தேனீர்.

      அளவுக்கு அதிகமான அற்புதங்களை கொண்டுள்ள இந்த ஆவாரம்பூ மனிதனின் நோயற்ற வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

  தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி   STAMP VENDOR        தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் 1. வட சென்னை - 31 2. தென் சென்னை - 38 3. மத்திய சென்னை - 21 4. காஞ்சிபுரம் - 51 5. செங்கல்பட்டு - 5 6. வேலூர் - 58 7. அரக்கோணம் - 5 8. செய்யாறு - 39 9. திருவண்ணாமலை - 8 10. சேலம் ( கிழக்கு ) - 8 11. சேலம் ( மேற்கு ) - 10 12. நாமக்கல் - 16 13. தர்மபுரி - 9 14. கிருஷ்ணகிரி - 11 15. கடலூர் - 11 16. விழுப்புரம் - 6 17. சிதம்பரம் - 4 18. திண்டிவனம் - 3 19. கள்ளக்குறிச்சி   - 9 20. விருத்தாசலம் - 19 21. புதுக்கோட்டை - 11 22. அரியலூர் - 23 23...

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

GRAMA UDAVIYALAR VILLAGE ASSISTANT

  திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு             திருவள்ளூர் மாவட்ட வருவாய்துறைக்கு உட்பட்ட வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .   பணி   -   கிராம உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 145 கல்வித்தகுதி - 5 ம்   வகுப்பு தேர்ச்சி மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்   இதர தகுதி : மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் / வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.   வயது - 01.07.2020 அன்று   மனுதாரர் 21 வயது நிரம்பியவராக   இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 21 க்கு மேல் 30 க்குள் BC, MBC ,   SC ,ST         - 21 க்கு மேல் 35 க்குள்                          ...