குடியரசுதினம்
விடுதலை நாள்
1930ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் "பூர்ண சுவராஜ்" (முழுமையான சுதந்திரம்) என்ற அறை கூவலை மகாத்மா காந்தியடிகள் அவர்களால் பரிந்துரைத்து உறுதிமொழி மூலம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது.
உறுதிமொழி
"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்".
குடியரசுநாள்
1930 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் முதற்கட்டமாக "சுதந்திர நாளாகக்" கொண்டாடப்படவேண்டும் என மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அனைவருக்கும் உத்தரவிட்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு, ஜனவரி 26-ஆம் நாள் தான் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.
குடியரசு தினத்திற்கான அரசியலமைப்பு
1947
ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 28 ஆம்
நாள் ஒரு
நிரந்தர அரசியலமைப்பை
உருவாக்கி, அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அவர் 1947 ஆம் ஆண்டு
நவம்பர் 4 ஆம் நாள் ஒரு வரைவு அரசியலமைப்பினை சமர்ப்பித்தார். 2 ஆண்டுகள் 11 மாதங்கள்
166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில் பல விவாதங்கள் நடைபெற்று கடைசியாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் 308 பாராளுமன்ற உறுப்பினர்களின்
ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நிரந்தர அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு
முன்பே மகாத்மா காந்தியடிகள் அவர்களால் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 ஆம் நாளை
மக்களாட்சி மலர்ந்த தினமாகக் (குடியரசுதினம்) கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து,
1950 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு
தினமாக கொண்டாடி வருகிறோம்.
தேசிய தலைநகர் டெல்லி
1.
நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர்,
மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு
வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத்
தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
2.
தலைநகர் டில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின
விழா அணிவகுப்பு நடைபெறும்
3.கடந்த
ஆண்டில் நாட்டிற்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும்
வழங்கப்படுகின்றன.
மாநிலத் தலைநகர்
1.
மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றத்துடன் காவலர்
அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
2.
சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசியக்கொடி
இந்திய
மண்ணின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களும் நினைவு கூறும் வகையில் சுதந்திரதினம்
மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய நாட்டு மக்கள் அனைவரும் இந்திய தேசியக்
கொடியினை தங்களது ஆடையில் குத்தி மகிச்சியினை வெளிப்படுத்துவர்.
கொண்டாட்டம்
1950 ஜனவரி 26 ஆம் நாளில் நம் நாடு குடியரசு
நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளையே நாம் குடியரசு தினமாக வருடந்தோறும் கொண்டாடி
வருகிறோம்.
- ஒவ்வொரு வருடமும் ஜனவரி
26 ஆம் நாள் நம்முடைய தாய் நாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை
நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும்,
கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றப்படுகிறது.
- ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று
சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி
கௌரவிக்கப்படுகிறது.
- அனைவருக்கும் இனிப்புகள்
வழங்கி கொண்டாடுகிறோம்.
தியாகம்
இன்றைய இந்தியா
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில்
லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும்
மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
வேற்றுமையில் ஒற்றுமை
இந்தியா சுமார்
125 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப்
பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைவோம்.
அனைவருக்கும்
72 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்....
கருத்துகள்
கருத்துரையிடுக