முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உணவே மருந்து

 உணவே மருந்து

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சித்த மருத்துவ வழிமுறைகள்

       உடலும் மனதும் சரியாக இருந்தாலே எந்த நோயும் ஏற்படாது. நாம் உண்ணும் உணவுதான் இந்த உடலை நோயில்லாமல் பாதுகாக்கிறது. சமையலறையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணவுபொருளும் நம் உடலில் உள்ள நாடி, நரம்பு, எலும்பு, தசை, திசுக்களை பாதுகாக்கின்றது. அதனால்தான் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் 'உணவே மருந்து, சமையல் அறையே நலம் தரும் மருத்துவமனை' என்று கூறப்படுகிறது. உடலின் எதிர்ப்புசக்தி குறைவதும், தொற்று நோய் ஏற்படுத்துவதும், இருக்கும் நோய் கட்டுப்படாமல், தீராமல்  இருந்துகொண்டே இருப்பதும் அவரவர் உணவுமுறை, பழக்கவழக்கம், உடல் உழைப்பு, வாழ்க்கை முறை, மனம் சார்ந்தே,   இருக்கிறது வேறுபடுகிறது.

      நவீன மருத்துவ அறிவியல் நம்மிடையே இல்லாத சுமார் 350 ஆண்டுகளுக்கு  முன்பு மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்தனர். தொற்றுநோயையும், தொற்றா நோயையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தனர்.

            இன்று நவீன மருத்துவ அறிவியல் உலகம் முழுவதும் பரந்து, விரிந்துஇருந்தாலும் நம்மால் நோயின்றி, மருந்தின்றி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ முடியவில்லை, இதற்கு நாம்தான் காரணம். ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நமக்கு போதாது. இதை சரியாக புரிந்து கொண்டு, சரியாக கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக, நீண்ட ஆயிலுடன் வாழலாம், வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

எதிர்ப்பு சக்தி தரும் உணவுப்பொருட்கள்

            இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், ஓமம், கிராம்பு, சீரகம் போன்றவை நம் சுகாதாரத்தை  பேணிகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கொண்ட இவை அனைத்தும் காயகற்பமாக நம் உடலின் உறுப்புகளை, செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகின்றன. நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் இவை இரண்டும் காயகற்ப கனிகள்.

காயகற்பம்

     காயம் என்றால் உடல், கற்பம் என்றால் நரை, திரை, மூப்பு, சாவு வராமல் பாதுகாப்பது. காயம் என்ற உடலை கற்பமாக பாதுகாப்பது மேற்கொண்ட இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் போன்றவையாகும்.

     இதைப்புரிந்து தான் நம் முன்னோர்கள் இவற்றை  மருந்தாக, உணவாக எடுத்துக்கொண்டு நலமுடன் 100 ஆண்டுகள் மருந்தின்றி, நோயின்றி வாழ்ந்தனர்.

இஞ்சி



இஞ்சியின் பயன்களையும் இஞ்சியை உட்கொள்ளும் முறையையும் அதன் பயன்களையும் வரிசையாக பார்ப்போம்

            இஞ்சியை இடித்து 5 மி.லி . சாறு எடுத்து 10 மி.லி. தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அனைவரும் சாப்பிடலாம்.

    இஞ்சியை துவையல் செய்து வாரத்தில் 2 நாட்கள் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

        இஞ்சியை தேனில் ஊறவைத்து தினம் ஒருதுண்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

      ➽ இஞ்சியை காயவைத்து நன்கு காய்ந்த பிறகு மேல்தோலை நீக்கிவிட்டு நன்கு அரைத்து சலித்து வைத்துக்கொண்டு மதியம் சுடுசாதத்தில் 5 கிராம் பொடியுடன் தேவையான உப்பு சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

   ➽ சுக்கு, மல்லி காபி பனங்கற்கண்டு சேர்த்து ஒருவேளை அல்லது இருவேளை குடிக்கலாம்.

      ➽ இஞ்சியை ஊறுகாய் செய்து மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

      ➽சுக்கு, மிளகு, திப்பிலியை ஒரே அளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து சலித்து வைத்துக்கொண்டு 1 முதல் 2 கிராம் வரை எடுத்து தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு தொடந்து எடுத்துக்கொள்ளலாம்.

   ➽மேற்கண்டபடி இஞ்சியை பல்வேறு விதங்களில் நாம் தினசரி பயன்படுத்தி வந்தால் இதய நோய், நுரையீரல் நோய், புற்றுநோய் போன்றவைகளை வராமலும் தடுக்கும், வந்திருய்ந்தாலும் விரைந்து குணப்படுத்தும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.

      ➽அதனால்தான் 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கவுளில்லை' என்ற கூற்று வழக்கத்தில் உண்டு.

பூண்டு



     ➽'பூட்டு இல்லாத வீடும் இல்லை, பூண்டு இல்லாத சமையல் அறையும் இல்லை' என்று சொல்வார்கள்.

      ➽இதயம், நுரையீரல், இரத்தம், மூளை இவைகளில் ஏற்படும் நோய்களை வராமல் தடுக்கும் மிகச்சிறந்த உணவுப்பொருள் பூண்டாகும். மாரடைப்பு, அதிக கொழுப்பு, காசநோய், ஆஸ்துமா, இரத்த புற்றுநோய், இரத்தம் உறைதல் போன்ற நோய்களுக்கு மிகச்சிறந்த தடுப்பு மருந்து பூண்டு.

      ➽பூண்டு தேனூறல், பூண்டு சட்னி, பூண்டு ஊறுகாய், பூண்டுபால், பூண்டு சேர்ந்த ரசம் போன்றவை மேற்கண்ட உடல் நோய்களுக்கு தடுப்பு மருந்தாக செயல்படும்.

      ➽எனவே எந்த வடிவிலாவது பூண்டை நாம் தினசரி உணவுடன் சேர்த்து கொள்ளல் வேண்டும்.

மிளகு



      ➽'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம், என்று நம் சித்தர்கள் / முன்னோர்கள் கூறியுள்ளனர் . இதயம் நுரையீரல் சார்ந்து வரக்கூடிய நோய்கள், பல்வேறு ஒவ்வாமைகள், காணாக்கடி நோய்கள், தோல்நோய்கள், ஆஸ்துமா பசியின்மை, செரியாமை, புற்றுநோய் இப்படி உடலில் தோன்றும் பல நோய்களுக்கு நிவாரணியாக செயல்படும் உணவுப்பொருள் மிளகு ஆகும்.

      ➽தினசரி 5 முதல் 10 மிளகினை பொடி செய்து தேன் கலந்து இரவு படுக்கும்போது சாப்பிடலாம்.

      ➽தினசரி காய்ச்சிய பாலில் 10 மிளகினை பொடி செய்து, சமஅளவு மஞ்சள்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து இரவு படுக்கும்போது குடிக்கலாம்.

      ➽திப்பிலி, மிளகு, பூண்டு ரசம் நுரையீரல்  சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்து.

      ➽பசியின்மை, செரியாமை, வாய்வு தொல்லை, வயிறு உப்புசம், தொண்டை கரகரப்பு போன்றவற்றிக்கு மிளகுப்பொடி தேன், மிளகு ரசம் நலம் தரும் மருந்து, மிளகை உண்போம், பிணியை வெல்வோம்.

மஞ்சள்



      ➽மங்களம் தரும், உடல் நலம் தரும், மங்கையர்களுக்கு பிடித்த மஞ்சள் மிகச்சிறந்த, மிக முக்கியமான உணவுப்பொருள். சமையல் அறை முதல் சகல சுபமங்கள காரியங்களிலும் பயன்படுத்தப்படும் மஞ்சள் கற்ப மருந்து மட்டுமல்ல, இதய நோய், நுரையீரல் நோய், தோல் நோய், புற்றுநோய் எப்படி சகல ரோக நிவாரணம் தரும் உணவுப்பொருள் ஆகும்.

  ➽ தினசரி காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள், கற்கண்டு சேர்த்து இரவு படுக்கும்போது குடிக்கலாம்.

    ➽ தோல் நோய்களுக்கு மஞ்சளை அரைத்து பற்று போடலாம், தேங்காய் எண்ணெயுடன் கலந்து மேல்பூச்சாக போட்டுக்கொள்ளலாம்.

    ➽ சாம்பார், ரசத்தில் மஞ்சள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

   ➽ வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த ,மருந்து மஞ்சள், முகப்பரு, தேமல், படை, கரப்பான் இருந்தால் மஞ்சள், சந்தனம் கலந்து பூசலாம். தினம் 5 கிராம் மஞ்சள், சந்தனம் பாலில் கலந்து குடிக்கலாம்

  ➽மஞ்சள் இல்லா  வீடும், மங்கை இல்லா வீடும் வீடல்ல என்று சொல்வார்கள். எனவே மங்களம் தரும், பிணி நீக்கும் மஞ்சளை பயன்படுத்துவோம்.

       ➽மேலும் எலுமிச்சை, நெல்லிக்காய் இவைகளும் காய கற்ப கனிகள், தினசரி இவைகளை பயன்படுத்த பழகிக்கொண்டால் நோயும் ஏற்படாது. மருந்தும் தேவைப்படாது.

      உடலின் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க சரியான நேரத்திற்கு அறுசுவை உணவு, நல்ல உடல் உழைப்பு  அல்லது உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கம், இயற்கையோடு இணைந்து வாழ்வது, மனமகிழ்ச்சி, ஓய்வு, உறக்கம் இவை அனைத்தும் சரியாக இருந்தால் நோயும் ஏற்படாது, மருந்து என்ற ஒன்றும் தேவைப்படாது. உடலின் எதிர்ப்பு சக்தியும் குறையாது.

            நம் உடல் ஆரோக்கியத்துடனும்நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருந்தால் மட்டுமே உடலுக்குள் செல்லும் வைரஸ் 14 நாட்களுக்குள் அழிந்துவிடும்.

            கொழுப்பு சேர்ந்த உணவுகளை குறையாக எடுத்துக்கொள்ளவேண்டும். அசைவ உணவுகளான மீன், முட்டை, கறி வகைகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. குளிர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.காரவகை உணவுகள் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள காலங்களில் எடுத்துக்கொள்வது நல்லது. தண்ணீரை எந்த காலத்திலும் / பருவத்திலும் கொதிக்கவைத்து ஆறவைத்து வடிகட்டி குடிப்பது நன்று. கொத்தமல்லி, புதினா, தூதுவளை, கறிவேப்பிலை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம், குடைமிளகாய் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிராம்பு, இலங்கம், பட்டை, முளைகட்டிய பயறுகள், பீன்ஸ், ராகி, கம்பு, சோளம், இவையெல்லாம் வைட்டமின் சி, ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, கொய்யா, பப்பாளி போன்றவற்றிலும் இச்சத்துக்கள் நிறைந்துள்ளன, பாதாம் பருப்பு, முந்திரி, எள்ளு, உளுந்து, வேர்க்கடலை, சிவப்பு அரிசி போன்றவற்றிலும் வைட்டமின் சி, ஜிங்க் நிறைந்துள்ளன.

                உணவே மருந்தாகட்டும்  உடலே நலமாகட்டும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

IFS FOREST EXAMINATIONS இந்திய வனத்துறை அதிகாரி

  இந்திய வனத்துறை அதிகாரி (IFS) காலியிடப் பணிக்கான அறிவிப்பு - 2021       மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இதற்குத் தகுதியும் / விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் .   மொத்த காலிப்பணியிடம் : 110 கல்வித்தகுதி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் , வேதியியல் , புவியியல் , கணிதம் , இயற்பியல் , புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம் , வனவியல் போன்ற ஏதேனும் ஒர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு 1.8.2021 தேதியின்படி MBC , BC - 21- க்கு மேல் 35- க்குள் இருக்க வேண்டும் SC,ST   - 21- க்கு மேல் 37- க்குள் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் 21- க்கு மேல் 32- க்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கட்டணம...

VEETU VASATHI VAARIYAM TN HOUSING BOARD

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு        அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான அறிவிக்கை அறிவிக்கை எண் . ப . தொ . நு . அ. 5/2643/2020.       தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன .   பணி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்                                               காலிப்பணியிடங்கள்   விவரங்கள் அலுவலக   உதவியாளர் : 10          ஓட்டுநர்           :           5   சம்பள ஏற்றமுறை       அலுவலக உதவியாளர் ரூ .15700-50,000 Level - 1             ...