நினைத்ததை தருபவன் மைலம் முருகன்
ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்திருக்கும் மைலம் முருகன் கோவில் தமிழகத்தின் ஏழாம்படையாக கருதலாம் . அந்த அளவிற்கு வல்லமை பெற்ற திருக்கோவில் இந்த திருக்கோவில். திண்டிவனத்திற்கு அருகிலும் பாண்டிச்சேரிக்கு சற்று தொலைவிலும் மைலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
கிருத்திகை விரத தினங்களில் விரதம் இருந்து மைலம் முருகனை தரிசித்தால் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும் அந்த அளவிற்கு வல்லமை பெற்ற திருக்கோவில்தான் மைலம் முருகன் திருக்கோவில் .
அபிஷேகம்
வள்ளி - தெய்வானையுடன் இணைந்து நிற்கும் மைலம் முருகன் ஒரு கையில் வேலுடனும், மற்றொரு கையில் சேவற் கொடியுடனும் பக்தர்களுக்கு காட்சி காட்சி தருகிறார். பெரும்பாலான கோவில்களில் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியே, நேராகவே இருக்கும். ஆனால் இங்கு மட்டும் வடக்கு திசையை நோக்கியபடி இருப்பது இத்திருத்தலத்தினில்தான் மிகச்சிறப்பு ஆகையில்தான் நினைத்ததை முடித்து வைக்கிறார் மைலம் முருகன் இத்திருத்தலத்தில் ஆடி கிருத்திகை திருவிழா மிக சிறப்பாக நடைபெறும் ஆடி கிருத்திகையன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வள்ளி, தெய்வானை முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் , சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும். பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இக்காட்சியினை பார்க்க பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அன்றைய தினத்தில் கடுமையாக விரதம் இருந்து மைலம் முருகனை வழிபட்டால் நினைத்ததை கண்டிப்பாக தருவார். மைலம் கோவிலில் முருகன் மூன்று விதமான உற்சவராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி - தெய்வானை சமோதரான பாலசுப்பிரமணியர்.
வாகனம்
பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்கு பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்திகையிலும், பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார்.பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமர்சையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக்கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வளம் வருவார் இந்த மூலவர்.
இரண்டாவது மூலவர் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி, பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிரகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது அருள் வழங்கும் இவர் 6வது நாளன்று திரும்பி வருவார்.
மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட ஷண்முக பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான். இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்.
முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கு, உரசவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.
அர்ச்சனை
மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மைலம் கோவிலில் செவ்வாய் கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப்பிரச்னைகளும் அகலும் என்பது நம்பிக்கை.
இதேபோல் உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தல் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
நினைத்தால் நடக்கும்
இத்தகைய சக்தி வாய்ந்த இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து, அருள் மிகு மைலம் முருகனை தரிசித்தால் நினைத்ததை மைலம் முருகனிடம் பெற்று வாழ்க்கையை வசந்தமாக வாழலாம்.
வாருங்கள் ஒருமுறை
வசந்தமுடன் வாழுங்கள் ஆயுள்வரை.
கருத்துகள்
கருத்துரையிடுக